காஞ்சீபுரம் மாவட்டம், திருக்காலிமேடு அரிஹந்த் அவன்யூ பகுதிகளில் குப்பை கொட்டுவதற்கு இடம் ஒன்று உள்ளது. இங்கு மாநகராட்சி வாகனங்கள் குப்பையை கொட்ட வரும் போது குடியிருப்புகளுக்கு அருகிலேயே குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைய குப்பை மேட்டில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.