பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிரவிடர் மாணவியர் விடுதி சுற்றுச்சுவர் இடிந்து திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்றநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.