அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

Update: 2023-11-19 13:37 GMT
அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
  • whatsapp icon

திருச்சி மாவட்டம் மருதாண்டக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட குழுமணி சங்கர் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார் சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மண் சாலையானது சேறும், சகதியமாக காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்