கோவை பாத்திமா ஆலயம் அருகே டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையின் ஓரங்களிலும், நடுரோட்டிலும் மருத்துவ கழிவுகளை கொட்டிவிட்டும், வீசிவிட்டும் செல்கின்றனர். இந்த பகுதி அதிக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடமாடும் பகுதியாக உள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.