மரக்கிளை அகற்றப்படுமா?

Update: 2023-11-19 10:18 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பூவன்குடியிருப்பு பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் கிளை வளர்ந்து அந்த வழியாக செல்லும் மின்கம்பிகளை மூடியபடி காணப்படுகிறது. இந்த மரக்கிளையில் கோழிகள் மற்றும் பறவைகள் அடைவதால் அடிக்கடி மின்சாரம் தாக்கி இறப்பதுடன், மின்தடையும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடையூறாக உள்ள மரக்கிளை வெட்டி அகற்றுவார்களாக?.

-பாஸ்கர், பூவன்குடியிருப்பு.

மேலும் செய்திகள்

மயான வசதி