சீதப்பால் அருகில் பூலாங்குழி குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் விவசாயம் உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக பராமரிக்காததால் செடி-கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், மறுபால் பாயும் வசதியும் அமைக்கப்படவில்லை. இதனால், செடிகளின் ஆக்கிரமிப்பால் சமீபத்தில் பெய்த மழையில் குளம் விரைவாக நிரம்பி மடையை உடைத்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள குளத்தின் மடையை சீரமைத்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திகேயன், சீதப்பால்.