விளாத்திகுளம் தாலுகா சித்தவநாயக்கன்பட்டியில் இருந்து வேலிடுபட்டி செல்லும் சாலையில் தரைமட்ட பாலம் உள்ளது. மழைக்காலத்தில் இந்த தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்லும்போது வாகன போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.