விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-11-05 18:03 GMT

அந்தியூர் பஸ் நிலையம் முன்பு சிறிய பாலம் மற்றும் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. போக்குவரத்து பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் பணிகள் மெதுவாக நடக்கிறது. இதனால் அந்த இடத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் கூட விலகுவதற்கு இடமில்லாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. மேலும் பஸ், லாரி, கார், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து பணியை முடிக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்