கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பணிகள், பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடுகின்றனர். மேலும் தங்களது முன்னோர்களுக்கு தா்பணம் கொடுக்கவும் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். ஆனால் திரிவேணி சங்கமத்தில் உள்ள படித்துறையில் வலப்புறமும், இடப்புறமும் உள்ள படிக்கற்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், புனித நீராட வரும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பக்தர்கள் நலன்கருதி படித்துறையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.