சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2023-10-29 16:50 GMT
பண்ருட்டி தட்டாஞ்சாவடி பஸ் நிறுத்தத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது இந்த பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. தற்போது பயணிகள் நிழற்குடை தனது உறுதி தன்மையை இழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பயணிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்