சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?

Update: 2023-10-29 15:10 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி எதிரில் கழிவுநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. மேலும், அதிக அளவு மக்கள் நடமாடும் பகுதி என்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சாலையில் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக இருக்கிறது. கழிவுநீர் அகற்றப்பட்டு சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்