சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் உள்ள இலவச பொது கழிப்பிடங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும், இலவச கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.