பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் அருகாமையில் உள்ள கிராம பொது சாவடியை கோவில் பயன்பாட்டிற்கும், பக்தர்கள் விழா காலங்களில் தரிசனத்திற்கு ஏதுவாக அமர்வதற்கும், சுவாமி புறப்பாட்டின்போது பூ அலங்காரம் செய்வதற்கான இடமாகவும், வழிப்போக்கர்கள் தங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.