பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கே ஏற்பட்டு உள்ளதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.