கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், பாலத்துறையில் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி வழியாக விவசாய பாசனத்திற்கு பயன்படுகிறது. தற்போது இந்த வாய்க்காலில் ஆகாய தாமரைகள் வளர்ந்து படர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.