நாகை பகுதி எல்.ஐ.சி. அருகே உள்ள மெயின் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவற்றால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் சாலை நடுவே கால்நடைகள் படுத்துக்கொள்வதால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.