சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராமத்திலிருந்து விரியூர் மகளிர் கல்லூரி செல்லும் சாலையில் சிறுபாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் தற்போது சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சிறுபாலத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டும்.