பெரம்பலூர் பால் குளிர்வு நிலையத்தில் 20 பால்வண்டிகள், 20 ஒப்பந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பொது அலுவலகமாக இருந்தும் பணியாளர்களுக்கு மட்டுமே கழிவறை வசதி உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆண், பெண் இருபாலரும் வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.