காட்சிப்பொருளான சோலார் மின்விளக்கு

Update: 2023-10-15 10:31 GMT
நாசரேத் அருகே வெள்ளமடம் பஞ்சாயத்து நொச்சிகுளம் கிராமத்தில் சாலையோரம் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் மின்விளக்குகள் ஒளிராமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே மக்கள் பயன்பாட்டுக்கு சோலார் மின்விளக்குகள் இரவில் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்