கிடப்பில் கால்வாய் பணி

Update: 2023-10-08 17:48 GMT
திட்டக்குடி தாலுகா மங்களூர் ஒன்றியம் கொரக்கவாடி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் பணி முழுமையாக முடிக்கப்படாமல், கடந்த ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் கால்வாயில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் நடுத்தெருவில் கால்வாய் பணி தொடங்கப்படாமல் உள்ளது. எனவே பணியை விரைந்து முடித்து கால்வாயை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்