திருவாரூர் மாவட்டம் குனவாசல் பகுதியில் பன்றிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள், தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதபடுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூட்டம், கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து பன்றிகள் செய்யும் அட்டகாசத்தால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நலன்கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?