சேலம் ஓமலூர்- 5 ரோடு செல்லும் வழியில் மாமாங்கம் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் அறிவிப்பு பலகை இல்லை. இதனால் இந்த இடத்தில் கார், இருசக்கர வாகனம் வேகமாக சென்று வருவதால் நின்று கொண்டிருக்கும் பஸ்சின் மீது மோதும் அபாயம் உள்ளது. இந்த இடத்தில் பஸ் நிறுத்த அறிவிப்பு பலகை அமைத்தால் கார், இருசக்கர வாகனங்கள் மெதுவாக செல்லும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.