விருத்தாசலம் திருவள்ளுவர் நகர் பகுதியில் குரங்குகள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள் கையில் இருக்கும் தின்பண்டங்களை பிடுங்கி செல்கின்றன. மேலும் இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வருபவர்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புக்காட்டில் விட வேண்டும்.