பெங்களூரு மாநகரின் மத்தியில் லால்பாக் பூங்கா அமைந்துள்ளது. பரந்து விரிந்த இந்த பூங்காவை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அதுமட்டுமின்றி நடைபயிற்சி மேற்கொள்ளவும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். ஆனால் லால்பாக் பூங்காவுக்கு வரும் சில காதல் ஜோடிகள் மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். இதை பூங்கா அதிகாரிகளும், அங்கு பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.