பெங்களூரு விவேக்நகரில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தை அப்பகுதியினர் ஆக்கிரமித்துள்ளனர். அதாவது அவர்களது கார்கள், இருசக்கர வாகனங்களை அங்கு நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அங்கு பஸ் நிறுத்தம் இருக்கிறதா?, இல்லையா? என்று தெரியாத அளவிற்கு நிலைமை உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?