திருச்சி மாவட்டம், உப்பியபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலக வளாகத்தை கம்பளிப் பூச்சிகள் ஆக்கிரமித்துள்ளது, பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சார் பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுப்பகுதிகள் செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புதர் மண்டி காணப்படுவதால், இதிலுள்ள கம்பளிப் பூச்சிகள் சார்பதிவாளர் அறை உள்பட அலுவலகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. பத்திரப்பதிவு அலுவல் காரணமாக வரும் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்குள்ளாகின்றனர். மேலும் அவை உடம்பில் ஏறினால் அரிக்கும் என அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.