தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டுகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் தெருநாய்கள் திடீரென சாலையில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடமாடவே பயப்படுகின்றனர். மேலும் பள்ளி முடிந்து வரும் மாணவர்கள் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு தெருநாய்களை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்தனர். அதேபோல் தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-குமார், பாலக்கோடு.