திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரில் உள்ள அய்யா கோவில் எதிரே உள்ள நிழற்குடை மழைநீர் வடிகால் பணிக்காக அப்புறப்படுத்தப்பட்டது. மழைநீர் வடிகால்வாய் பணி முடிந்து 2 மாதங்கள் ஆகியும் புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், மழை காலங்களில் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய நிழற்குடையை அமைக்கப்படுமா?