திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகேயுள்ள வி.ஜி.என். விக்டோரியா பார்க் - ஹைவ் என்ற தனியார் குடியிருப்பு பகுதிக்கு அருகே காம்பவுண்ட் சுவருடன் கூடிய காலிமனை உள்ளது. இங்கு தண்ணீர் தேக்கம் பிரச்சினை குறித்து பல தடவை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை பலனில்லை. இந்தநிலையில் காம்பவுண்ட் சுவரில் பெரிய விரிசல் ஏற்பட்டு ஏரி நீர் முழுவதும் குடியிருப்பு பகுதியை சூழ்ந்திருக்கிறது. இதனால் சிரமம் ஏற்படுவதுடன் நோய் தாக்குதலும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய நீரை அப்புறப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் இதுபோல பிரச்சினை ஏற்படாமல் இருக்க மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.