கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம், புன்னம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கிரசர்கள், கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தயாரிக்கப்படும் கற்கள் லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த லாரிகளில் அதிக அளவு கற்களை ஏற்றி செல்வதால் பின்னால் செல்லும் வாகனங்கள் பயந்து கொண்டே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சில நேரங்களில்லாரிகள் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போது கற்கள் சிதறி கீழே விழுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.