நொய்யலில் இருந்து தளவாபாளையம் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் இடது கரையில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் சாலையின் ஓரத்தில் இருபுறமும் ஏராளமான நாணல் தட்டுகள் மற்றும் பல்வேறு வகையான செடி கொடிகள் முளைத்துள்ளது. இதன் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.