செல்போன் வந்துவிட்ட பிறகு மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. புத்தகம் வாசிப்பதனால் அறிவு வளருவதோடு எது நல்லது, எது கெட்டது என தெரியவரும். நல்ல பழக்க வழக்கங்கள் பெருகுவதோடு மனமும் வலிமை பெறும். ஆகையினால் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளையோர்கள் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசிக்க விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.