கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாரம் உள்ளது. இந்த ஊரின் மேற்கு புறத்தில் அகஸ்தியர் புதுகுளம் உள்ளது. இந்த குளத்தில் தாமரைகள் செடிகள் அதிகளவில் படா்ந்துள்ளன. இதனால், குளத்தில் சூரிய ஒளி உட்புக முடியாததால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள தாமரை செடிகளை அகற்றி தண்ணீர் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.