விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள கிளை நூலகம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள், வாசகர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நூலகத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.