ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றிய பகுதிகளுக்கு இணையம் மற்றும் டெலிபோன் கேபிள்கள் மின்கம்பங்கள் மூலமாக கொண்டுசெல்லப்படுகிறது. இதில் கீழக்கிடாரம் முக்குரோடு பகுதி சாலைகளில் சில இடங்களில் கேபிள்கள் அறுந்து சாலையில் கிடக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த கேபிள்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.