கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூர் புகழூர் வாய்க்காலின் குறுக்கே சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி பாலம் கட்டப்பட்டது. தற்போது இந்த பாலம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.