நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி பஞ்சாயத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை மருந்தகம் உள்ளது. தற்போது இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கழிவுநீர் கால்வாய் நான்கு அடி உயரம் அமைக்கப்பட உள்ளதால் கால்நடை மருந்தகம் கேட் திறக்க முடியாமல் உள்ளது. இதனால் இந்த மருந்தகத்திற்கு கால்நடைகளை உள்ளே அழைத்து செல்வதற்கு இடையூறாக இருக்கும். எனவே கழிவுநீர் கால்வாயை சரியான உயரத்தில் அமைக்க வேண்டும்.
-பிரபாகரன், குரும்பப்பட்டி, நாமக்கல்.