தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டவுன் பஸ் நிலையம் அருகில் அரசு வணிக நிறுவன கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் ஓட்டல்கள், பேக்கரி, போன்ற கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த கடைகளில் இருந்து புகை வெளியேற உரிய புகைகூண்டு அமைக்கப்படாததால் அந்த பகுதியே புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் புகைகூண்டு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமா?
-பசுபதி, பாலக்கோடு.