உடன்குடி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள மணிக்கூண்டில் உள்ள கெடிகாரம் பழுதடைந்த நிலையில் இருந்தது. பின்னர் கெடிகாரம் சேதமடைந்ததால் அதனை அகற்றி விட்டனர். இதனால் மணிகூண்டு காட்சிப்பொருளாக உள்ளது. எனவே பஸ் நிலைய மணிக்கூண்டில் மீண்டும் கெடிகாரம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.