திட்டக்குடி அருகே வெண்கரும்பூர் கிராமத்தில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் காலரா, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க வெண்கரும்பூரில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.