விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசு கடிப்பதால், பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும்.