நாகை காடம்பாடி பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் கொசுக்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் தூங்க முடியாத நிலை உள்ளது. மேலும், கொசுக்கடியினால் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன்கருதி மேற்கண்ட பகுதியில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?