தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் மைய கட்டிடத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அங்கு கொண்டு செல்லப்படும் குப்பைகளை வெளியில் ஓடையில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.