டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையம் ஊராட்சியில் உள்ள மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.