விழுப்புரம் பகுதியில் கொசுத்தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்கிளில் நகர மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.