ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை கிராமத்தில் வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது இருக்கன்துறை- ஊரல்வாய்மொழி மெயின் ரோட்டின் ஓரத்தில் குளம் போன்று தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.