ஆலங்குளம் அருகே குத்தப்பாஞ்சான் பஞ்சாயத்து காளத்திமடம் பகுதியில் அமைக்கப்பட்ட வடிகாலில் மழைநீர், கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்குகிறது. மேலும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் வந்து விடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலில் மழைநீர், கழிவுநீரை முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.