கீழ ஆசாரிபள்ளத்தில் இருந்து பெருஞ்செல்வவிளைக்கு செல்லும் சாலையில் வெள்ளமண்ணோடை பகுதியில் சாலையின் குறுக்கே ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.