சங்கராபுரம் அருகே பாக்கம் கிராமத்தில கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.