பண்ருட்டி தாலுகா பேர்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம், புலவன்குப்பம் போன்ற கிராமங்களில் கொசுத்தொல்லை அதிமாக உள்ளது. இதனால் கிராம மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மேற்கண்ட கிராமங்களில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.